Thipaan / 2015 ஜூலை 26 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்
சுமார் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான மதுபானங்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு ஒரு இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது மேலதிக நீதவான் திலக்கரத்ன பண்டார உத்தரவிட்டார்.
தடுகம்ஓய, கிம்புல்பொக்க தீவுப் பகுதியில், கண்டல் தாவரங்களைக் கொண்ட காட்டுப் பகுதியில் இரகசியமான முறையில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத மதுபான தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைத்த நீர்கொழும்பு கலால் பிரிவு அதிகாரிகள், சுமார் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான மதுபானங்களை கைப்பற்றியுள்ளதோடு சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்தனர்.
கலால் பிரிவு அதிகாரி ஒருவருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து கலால் பிரிவு அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை (24) படகொன்றில் சென்று இந்த சுற்றி வளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது 737 சட்டவிரோத மதுபான போத்தல்கள், மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .