2025 மே 07, புதன்கிழமை

மதுபோதையில் மாணவர்களை ஏற்றிச் சென்ற சாரதிக்கு மூன்றுமாத சிறை

Thipaan   / 2015 ஜூலை 26 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

பாடசாலை மாணவர்கள் 15 பேரை மதுபோதையில் பாடசாலை சேவை வாகனத்தில் ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்த வாகன சாரதிக்கு, நீர்கொழும்பு மேலதிக நீதவான் திலகரத்ன பண்டார, சனிக்கிழமை(25) மூன்று மாத சிறை தண்டனை விதித்தார்.

கட்டானை, கேங்கொடமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த லியனவடுகே தரங்க புஸ்பகுமார (34 வயது) என்ற குறித்த சாரதி தனக்கெதிரான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதையடுத்து, நீதவான் மேற்கண்ட தீர்ப்பை வழங்கினார்.

மாணவர்களை பாடசாலைக்கு ஏற்றிச் செல்லும் சேவையில் ஈடுபட்ட குறித்த வாகன சாரதி, கடந்த வெள்ளிக்கிழமை (24) பகல் மாணவர்களை வாகனத்தில் ஏற்றிச் சென்று கொண்டிருக்கையில் நீர்கொழும்பு சம்பத் வங்கி முன்பாக, பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.  

இதன்போது அவர் மதுபோதையில் இருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
அதன்பின்னர்   சாரதி வைத்திய சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது,  அவர் மது அருந்தியிருந்தமை உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, அவரை நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட நீதவான் மூன்று மாத சிறைத் தண்டனை விதித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X