Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Kogilavani / 2015 ஜூலை 29 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியில் அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் என்ற உறுதிமொழியுடன் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் கொள்கைப்பிரகடனம், தமிழ் மக்கள் மத்தியில் புதியதொரு நம்பிக்கையை துளிர்விடச் செய்துள்ளது என் வேட்பாளர் சண்.குகவரதன் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடபகுதி தமிழ்மக்கள் தெற்கு சிங்கள மக்களுடன் இணைந்து தயார் என்ற செய்தியை வெளியிட்டனர். அதேபோன்று கொழும்பு, மலையகம் உட்பட நாடு பூராவும் வாழும் தமிழ்மக்கள் அமோக வாக்களித்து மைத்திரிபால சிரிசேனவை ஜனாதிபதியாக்கினார்கள்' என்றார்.
'இன்று சிங்கள தரப்பு முற்போக்கு சக்திகளான ஜாதிக ஹெல உறுமய, சுதந்திரக் கட்சியின் மிதவாதக் குழுவும் தமது முழுமையான ஆதரவை ஐ.தே.மு கொள்கை பிரகடனத்துக்கு வழங்கி அதிகாரப் பரவலாக்கலுக்கு ஆதரவு வெளியிட்டுள்ளது. இது நாட்டின் தேசிய நல்லிணக்கத்துக்கு கிடைத்த வெற்றியாகும்' என்று அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago