Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Thipaan / 2015 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட். ஷாஜஹான்
பாண் வியாபாரி போன்று நடித்து நீர்கொழும்பின் பல்வேறு பிரதேசங்களிலும் போதைப் பொருள் விநியோகித்து வந்த இளைஞர் ஒருவரை, ஆறரை இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோய்ன் போதைப் பொருளுடன் நீர்கொழும்பில் வைத்து வியாழக்கிழமை (30) கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் பொலிஸார் தெரிவித்தனர்.
கொச்சிக்கடை, ஏத்காலை பிரதேசத்தைச் சேர்ந்த தேவராஜா ஆசிக் (23 வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபராவார்.
சந்தேக நபரிடமிருந்து 13 கிராம் 123 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி ஆறரை இலட்சம் ரூபாவாகும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒனறை அடுத்து சந்தேக நபர் பஸ் ஒன்றிலிருந்து இறங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பிராந்திய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் ஆனந்த ஹேரத், சாஜன் குணசேகர பொலிஸ் கான்ஸ்டபிள்களான பிரியந்த மற்றும் அபேவிக்ரம ஆகியோரைக் கொண்ட குழவினர் சந்தேக நபரை போதைப் பொருளுடன் கைது செய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago