Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Thipaan / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட். ஷாஜஹான்
இதுவரை காலமும் இடம்பெற்ற தேர்தல்களில் கம்பஹா மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் வாக்குகள் பெரும்பான்மையின வேட்பாளர்களால் கொள்ளையிடப்பட்டன. கம்பஹா மாவட்டத்திலிருந்து மாகாண சபைக்கு அல்லது நாடாளுமன்றத்துக்கு தமிழ், முஸ்லிம்கள் தெரிவு செய்யப்படாமைக்கு தமிழ் பேசும் மக்கள்தான் காரணம் என மேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்டவேட்பாளருமான ஷாபி ரஹீம் தெரிவித்தார்.
எமது மக்கள் தேர்தல்களின் போது பெரும்பான்மையின பிரதிநிதிகளுக்கு அதிகம் வாக்களிக்கின்றனர். பின்னர் ஏமாந்து போகின்றனர். எமது வாக்குகள் கொள்ளையிடப்படுவதை நாங்;கள் உணர்வதில்லை என கூறினார்.
நீர்கொழும்பு பெரியமுல்லையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நான் இதுவரை மூன்று தடவைகள் மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். ஆயினும் தமிழ் வேட்பாளர் ஒருவர் தெரிவு செய்யப்படாமை துரதிர்ஷ்டவசமானதாகும்.
கம்பஹா மாவட்டத்தில் 80 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களும், 70 ஆயிரம் தமிழ் வாக்காளர்களும் உள்ளனர். இரு இனங்களும் இணைந்து வாக்களித்தால் இரண்டு தமிழ் பேசும் வேட்பாளர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப முடியும்.
எமது மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மை இனத்தவர்களான நாங்கள் இருவரும் வெற்றிபெற வேண்டுமென்றால் தமிழ் பேசும் பேசும் மக்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் வேட்பாளர் எஸ் சசிகுமார், கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி நியாஸ் முஹம்மத் உட்பட முஸக்கியஸ்தர்கள் பலர் பங்கு பற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago