Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன், புதன்கிழமை (05) நண்பகல் 12.10 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர்.
பிலியந்தலாவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய குறித்த இளைஞனிடமிருந்து 5 கிராம் 210 மில்லிகிராம் ஹெரோய்ன் மீட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .