Sudharshini / 2015 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட். ஷாஜஹான்
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் தமக்குக் கிடைத்த மக்கள் பலத்தை, ஏழை மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்குப் பயன்படுத்தி மக்கள் சேவை செய்தார்கள் என முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவுக்கு ஆதரவு தெரிவித்து நீர்கொழும்பு தொழில் வல்லுனர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பிரசார கூட்டம் வெள்ளிக்கிழமை (7) இரவு நீர்கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இந்த பொதுத் தேர்தலில் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியை ஐக்கிய தேசியக்கட்சி கைப்பற்றும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. தோல்வி அடைந்த ஜனாதிபதி ஒருவர், மீண்டும் தேர்தலில் நிற்பதை உலகில் நான் எங்கும் கண்டதில்லை. டட்லி சேனாநாயக்கா முதல் எமது நாட்டுத் தலைவர்கள் அனைவரும் நேர்மையாகவே நடந்து கொண்டார்கள். பொதுமக்களின் சொத்தை அந்தத் தலைவர்கள் சூறையாடவில்லை. சுயநலத்துடன் எப்போதும் நடந்ததும் இல்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் முதலாவது இன்னிங்சை ஜே.ஆர்.ஜயவர்தனா ஆடியிருக்கிறார். இரண்டாவது இன்னிங்சை ரணில் விக்கிரமசிங்க ஆடுவார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட 'லம்போகினி' அதிநவீன வாகனங்கள் பதிவு செய்யப்படவில்லை. மேலும், அவை காப்புறுதி செய்யப்படவில்லை. இதன் காரணமாக அவை எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது என்றார்.
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago