Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொலன்னாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மடுவத்வெல பிரதேசத்தில் அமைந்துள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பாழடைந்த வீடென்றின் பின்னால் இளைஞனும் சிறுமியும் சடலங்களாக ஞாயிற்றுக்கிழமை (09) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
19 வயதான மாலிங்கே திலிணா பிரியங்கர என்ற இளைஞனும் 15 வயதான கடிடாவிடிகே இஷானி தில்ருக்ஷி என்ற சிறுமியுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் காதலர்கள் எனவும் இதற்கு முன்னர் குறித்த சிறுமி கடந்த 5ஆம் மாதம் 24ஆம் திகதி குறித்த இளைஞனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பின்னர் இளைஞன் கைது செய்யப்பட்டு அம்பிலிப்பிட்டிய நீதிமன்றத்தினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு 1 லட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பின்னர் குறித்த இளைஞன், கடந்த 6ஆம் மாதம் 4ஆம் திகதி குறித்த சிறுமியை கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டு பின்னர் 25,000 ரூபாய் சரீரப்பிணையில் 8ஆம் மாதம் 6ஆம் திகதி விடுவிக்கப்பட்டார். அதன்பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) காலை 10.40 மணியளவில் இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கொலன்னாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .