Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பிரதேசங்களுக்கும் பிரச்சினையாகவுள்ள கழிவுப் பிரச்சினைக்குத் தீர்வாக மத்திய சுற்றால் அதிகாரசபையினால் நாடெங்கிலும் கூட்டெரு உற்பத்தியை மேற்கொள்வதற்கு நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான ஒரு விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு மகாவலி நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றது.
பிலிசரு கருத்திட்ட நிதி உதவியின் கீழ் நாடளாவிய ரீதியில் மாகாண ஆட்சிப் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் இந்த கூட்டெரு உற்பத்தித் திட்டத்தை சிறப்பான முறையில் முன்னெடுப்பது தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கூட்டெரு செயற்திட்டத்தின் மத்திய நிலையங்கள் உள்ள மாத்தறை, லங்காபுர, மஹாஓயா, ஹம்பாந்தோட்டை மற்றும் லுணுகம்வெஹர ஆகியவற்றின் தற்போதைய நிலமைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், இத்திட்டங்களை முன்னெடுக்கும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது கூட்டெரு உற்பத்தி அலகுகளை வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறன் மிக்கதாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தினை ஜனாதிபதி இங்கு அழுத்தமாக வலியுறுத்தினார்.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் நிமல் ரூபசிங்க, மத்திய சுற்றுச்சுழல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் லால் மேர்வின் தர்மசிறி, பணிப்பாளர் நாயகம் கே.எச். முத்துகுடா ஆராச்சி மற்றும் பிலிசரு திட்டப் பணிப்பாளர் ஆர். வெல்பொல ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.


9 minute ago
22 minute ago
30 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
30 minute ago
31 minute ago