Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூடிய கவனம் செலுத்தி வருகின்றார் என நிதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ரவி கருணாநாயக்க, புதன்கிழமை (12) தெரிவித்தார்.
அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் நடைபெற்ற மௌலவிகள் மற்றும் புத்திஜீவிகளுடனான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் கடந்த அரசாங்கத்தில் இம்மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் தெரிவித்தார்.
இம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்குமாறு அடிக்கடி என்னிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறுவார். அத்துடன், இவ்விடயங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளார்.
எதிர்வரும் 17ஆம் திகதிக்குப் பின்னர் ஏற்படுத்தப்படும் எமது புதிய அரசாங்கத்தில் இம்மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரை வழங்கி அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.
குறிப்பாக கொழும்பு முஸ்லிம்களின் கல்வி நிலையை கருத்திற்கொண்டு புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு - செலவுத்திட்டத்தில் கொலன்னாவையில் முஸ்லிம் பாடசாலையொன்றுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாடசாலை நிர்மாணித்துக் கொடுக்கப்படுமென என நான் உங்கள் முன் உறுதியளிக்கின்றேன்.
அத்துடன், மாணவர்களின் பாடசாலை அனுமதி, பௌதீக வளங்கள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறைகள் என்பவற்றுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். முஸ்லிம் மையவாடி பிரச்சினை தொடர்ந்தும் இருந்து வருகின்றது. இதற்கும் நாம் உரிய தீர்வை பெற்றுக்கொடுப்போம் என்றார்.
9 minute ago
22 minute ago
30 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
30 minute ago
31 minute ago