2025 மே 07, புதன்கிழமை

தேர்தல் பிரசாரத்துக்காக சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் கைப்பற்று

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்
 
தேர்தல் சட்டவிதிகளை மீறி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வாகனமொன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை சுவரொட்டிகள், பதாதைகள், பௌத்த தேரர்கள் அணியும் ஆடைகள், அச்சிடப்பட்ட தொப்பிகள், ரீ சேர்ட் மற்றும் தண்ணீர் போத்தல்கள் ஆகியவை நேற்று வியாழக்கிழமை (13) கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர். 

சீதுவை ரயில் குறுக்கு வீதியொன்றில் வைத்து, சீதுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.யு.டப்ளியு.எல். விக்ரமசிங்க தலைமையிலான குழவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே மேற்படி பிரசாரப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்கள், பொது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் களனி தேர்தல் தொகுதி அமைப்பாளரும் வேட்பாளருமான பிரசன்ன ரணவீரவுக்கு சொந்தமானது எனவும் அவற்றில் பிரசன்ன ரணவீரவின் படம் மற்றும் விருப்பு இலக்கம் அச்சிடப்பட்டிருந்ததாகவும் சீதுவை பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X