George / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு– 12 வாழைத்தோட்டம் அல் ஹிக்மா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள பழைய மாணவர் வருடாந்த ஒன்று கூடல், பாராட்டுவிழா மற்றும் இரவு விருந்துபசார நிகழ்வு, நாளை சனிக்கிழமை(22) இரவு 7.30 மணிக்கு கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள செரண்டிப் விருந்தினர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி கல்லூரியில் கல்விகற்ற பழைய மாணவர்களையும் நலன் விரும்பிகளையும் ஒன்றிணைத்து அவர்களின் பூரண ஒத்துழைப்புடன் பாடசாலையின் கல்வித்துறை மற்றும் பௌதீக வளத்துறையை மேம்படுத்தும் நோக்கின் ஓர் அங்கமாகவே வருடாந்த இரவு விருந்துபசார நிகழ்வு நடாத்தப்பட்டு வருகின்றது.
கல்லூரியின் அதிபரும் பழைய மாணவர் சங்கத்தின் தலைவருமான கே.எம்.எம். நாளிர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், பழைய மாணவர்களான நாடகக் கீர்த்தி கலாபூஷணம் கலைஞர் கலைச் செல்வன் காதிபுல் ஹக், கலாபூஷணம் எஸ்.ஐ.நாகூர் கனி, கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும் ஆய்வாளருமான திருமதி சகீனா அலிகான், களுபோவில, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் வைத்தியர் டொக்டர் எம்.ஏ.ருஷ்தி மற்றும் சுங்க அத்தியட்சகர் எஸ்.எச்.எம்.அலி ஜின்னாஹ் ஆகியோர் பழைய மாணவர் சங்கத்தினால் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, இந்தநிகழ்வில் பேருவளை ஜாமியா நழீமிய்யாவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எச்.எச்.எம்பலீல் விஷேட உரை நிகழ்த்தவுள்ளதாக கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் தெரிவித்தார்.
9 minute ago
22 minute ago
30 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
30 minute ago
31 minute ago