2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

22 கிலோ கிராம் தங்கக் கடத்தல் முறியடிப்பு

Editorial   / 2022 டிசெம்பர் 09 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.பி கபில

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க வரலாற்றில், இரண்டாவது தடவையாக ஆகக் கூடுதலான தங்கக் கடத்தல், இன்று (09) முறியடிக்கப்பட்டுள்ளது.

40 கோடி ரூபாய் பெறுமதியான 24 கரட் தங்கம் 22 கிலோகிராமுடன் நாட்டுக்குள் நுழைய முயன்ற இலங்கை பயணிகள் ஐவர் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தை அரசுடமையாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்திய புலனாய்வுதுறை அதிகாரிகள் வழங்கிய தகவல்கள் அடிப்படையிலேயே இந்த சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தங்கம் ஜெல் போல தயாரிக்கப்பட்டு, உள்ளாடைகளில் மறைத்துவைத்தே கொண்டுவரப்பட்டுள்ளது. 24 கரட்டில் தயாரிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் நிறைவு செய்யப்படாத வகையில் கைகள், கழுத்துகளில் அணிந்தும் இவர்கள் எடுத்துவந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .