Menaka Mookandi / 2012 பெப்ரவரி 01 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
'களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ் கைதிகளை மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்ற சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் அவர்கள் அனுபவிக்க நேர்ந்துள்ள பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு காண உரிய தரப்பினர் முன்வர வேண்டும்' என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும், தேசிய சேவைச் சங்கத்தின் தலைவருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'அண்மையில் கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள் பீதியடைந்தனர். இந்தச் சம்பவங்களுடன் தமிழ் கைதிகள் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. எனினும் அவர்களை சம்பந்தப்படுத்த அமைதியின்மை சம்பவத்துடன் தொடர்புடைய கைதிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர்.
மாறாக இந்தச் சம்பவத்துடன் தமிழ்க் கைதிகளும் விருப்பத்துக்கு மாறாக தொடர்புபட்டிருந்தால் அவர்கள் துரதிஷ்டவசமான நிலைமைக்கு முகங்கொடுப்பார்கள் என்பதும் தவிர்க்க முடியாதொன்றாகும்.
எனினும், இந்த தமிழ்க் கைதிகள், அவர்களின் பாதுகாப்புக்காக களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர். வெலிக்கடை சீ.ஆர்.பி. சிறையிலும், ஜே சிறைக்கூடத்திலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த 200ற்கும் அதிகமான தமிழ்க் கைதிகள் களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.
உண்மையில் அவசர காரணத்தால் இந்த தமிழ்க் கைதிகளின் பாதுகாப்புக்காக அவர்கள் களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டமை வரவேற்கத்தக்கதாகும். எனினும் இந்த அமைதியின்மை தற்போது முழுமையாக தனிந்துவிட்டது. ஆனாலும் களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ்க் கைதிகள் மீண்டும் வெலிக்கடை சிறைக்கு அழைத்து வரப்படவில்லை.
களுத்துறையிலிருந்து கொழும்பு நீதிமன்றங்களுக்கு இத்தமிழ்க் கைதிகள் அழைத்துவரும் போது அநாவசிய கால தாமதங்கள் இடம்பெறலாம். இதேவேளை, இக்கைதிகளைப் பார்க்க வரும் பெற்றோர், உறவினர்களுக்கும் தற்போது களுத்துறைக்குச் செல்ல வேண்டியதொரு நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த விடயங்களை விளங்கிக் கொண்டு களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட வெலிக்கடை சிறைச்சாலை தமிழ்க் கைதிகளை மீண்டும் மாற்றம் செய்யுமாறு சிறைச்சாலை அதிகாரிகளையும், சம்பந்தப்பட்டவர்களையும் கேட்டுக் கொள்கின்றேன்' என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
31 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago