Editorial / 2020 செப்டெம்பர் 09 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஜெயரட்னம்
களுத்துறை நகரசபை நிர்வாகத்தின் கீழ் இயங்கும், களுத்துறை தீயணைப்பு படைப் பிரிவு பொறுப்பதிகாரிளுக்கு, உத்தியோகபூர்வ இல்லமாக வழங்கப்படும், களுத்துறை தெற்கு பழைய சிறைச்சாலை கட்டடத்தில் அமைந்துள்ள விடுதியில், கடந்த ஒன்றரை வருடகாலமாக பலவந்தமாக தங்கி இருக்கும் களுத்துறை தீயணைப்பு படையின் முன்னாள் பொறுப்பதிகாரிக்கு எதிராக, வழக்குத் தொடர, களுத்துறை நகரசபை தீர்மானித்துள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில், களுத்துறை நகரசபை, களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன், மேல் மாகாண நிர்வாக ஆணையாளரின் மூலம், ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவந்து, ஆளுநரின் சிபாரிசுக்கமைய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
களுத்துறை நகரசபையில் நேற்று (8) நடைபெற்ற ஒன்றுகூடலின்போதே, இந்ததத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி முதல், களுத்துறை தீயணைப்பு படைப் பிரிவில் இருந்து, கொழும்பு மா நகரசபை தீயணைப்பு படைப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போது கொழும்பு தீயணைப்பு படைப் பிரிவின் கீழ் கடமையாற்றிவரும் மேற்படி அதிகாரி, உரிய முறையில் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை நகரசபை நிர்வாகத்திடம் கையளிக்காது, குடும்பத்தார் சகிதம் தங்கி இருப்பதுடன், பலவந்தமாக உரிமைக் கொண்டாடி வருகிறார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், அதற்கான வாடகைத் தொகையையும், கடந்த ஒன்றரை வருட காலமாக அவர் செலுத்தி வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
28 minute ago
33 minute ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
33 minute ago
6 hours ago
7 hours ago