2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

அதிபரின் கணினியை திருடிய இரண்டு மாணவர்கள் கைது

Editorial   / 2020 ஜூன் 03 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார

பேருவளை பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில்,  பாடசாலை அதிபரின் அறைக்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கணினியை திருடிய மாணவர்கள் இருவரை, பேருவளை பொலிஸார் நேற்று (02) கைதுசெய்துள்ளனர்.

பாடசாலையில் கடந்த 1 ஆம் திகதி சிரமதான பணிகள் இடம்பெற்றபோது, அதிபர் தனது அலுவலக அறையை திறந்து பார்த்தபோதே, கணினி திருடப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அதிபர் பேருவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், 13, 12 வயதுகளைளுடைய இரண்டு மாணவர்களை கைதுசெய்துள்ளதுடன், திருடப்பட்ட கணினியை அவர்களது உறவினர் ஒருவரின் வீட்டிருந்து கைப்பற்றியுள்ளனர். 

கணினி விளையாட்டில் ஆசை ஏற்பட்டே தாம் இதனை திருடியதாக,  அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோரை அழைத்து பொலிஸார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இம்மாணவர்கள் இருவரும் வேறு ஒரு பாடசாலையில் கல்வி பயில்பவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

கைதுசெய்யப்பட்ட மாணவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.    
  

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X