Kogilavani / 2016 ஜூலை 29 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு கனடா அரசாங்கம் தனது பூரண ஒத்துழைப்பை வழங்குமென கனடா வெளியுறவு அமைச்சர் ஸ்டெபன் டியன் தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கையின் நீதிமன்ற முறைமையை பலப்படுத்தி ஜனநாயத்தை வலுவடையச் செய்வதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பாராட்டுத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர், இலங்கையின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்தார். இதேவேளை, சூரிய மின்சக்தி உற்பத்தி கருத்திட்டங்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டார்.
அவ்வாறே சிறிய தொழில் முயற்சியாளர்களை வலுவடையச் செய்யும் நோக்கில் சணச அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து தொழில் முயற்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கனடா வெளியுறவு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்துதல் மற்றும் அதன்மூலம் சுதந்திரமான நீதிமன்றத்தை உருவாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதியினால் கனடா வெளியுறவு அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துதல் மற்றும் காணாமற் போனோர் பற்றிக் கண்டறிவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி ஜனாதிபதி விளக்கிக் கூறினார்.
இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஷ்வர, கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கே.ஏ.ஜவாட், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் ஷேலி விட்டின் உள்ளிட்ட கனடா நாட்டு பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026