2025 மே 05, திங்கட்கிழமை

இலவசக் கல்விக்குப் புதிய உத்வேகம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் இலவசக் கல்வியைப் வலுப்படுத்துவதற்கு அனைத்து அரசாங்கங்களும் முன்னெடுத்த நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தற்போதைய அரசாங்கம் புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மொரட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியில் நேற்று (06) முற்பகல் இடம்பெற்ற வருடாந்த பரிசரிளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இவ் விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி, ஒரு நாட்டில் கற்றவர்கள் அதிகரிப்பதன் மூலம் அந்நாடு துரிதமாக அபிவிருத்தி அடையும் எனக் குறிப்பிட்டார்.

பிள்ளைகளை புதிய தொழில்நுட்ப உலகுடன் இணைத்து எதிர்பார்க்கும் வெற்றியை நோக்கி அவர்களை வழிநடத்த தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் டெங்கு நோய் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக கல்லூரிக்கு வருகைதந்த சந்தர்ப்பத்தை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, டெங்கு நோயை ஒழித்துக்கட்டும் நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு பாடசாலை பிள்ளைகள் முதல் அதனைத்து பிரஜைகளினதும் ஒத்துழைப்பு அரசாங்கத்துக்குத் தேவை எனக் குறிப்பிட்டார்.

டெங்கு நோய் குறித்து இன்று சிலர் பல்வேறு விடயங்களை முன்வைக்கின்ற போதும் டெங்கு நுளம்புகளை ஒழிப்பது உலகத்துக்கு இன்று சவாலாக உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பூகோள வெப்பமயமாதலுடன் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் உருவாகும் டெங்கு நுளம்பு காரணமாக உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளும் பாரிய அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X