2025 மே 05, திங்கட்கிழமை

இவ்வாண்டு காதலர் தினத்தில் 10,000 யுவதிகள் கன்னித்தன்மை இழப்பு

Kogilavani   / 2017 பெப்ரவரி 20 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனனி ஞானசேகரன்

இலங்கையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யுவதிகள், காதலர் தினத்தில் கன்னித்தன்மையை இழந்துள்ளதாக ஸ்கொடிஷோர்பிட் எனும் நிறுவனம் நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன், 4,500 ரூபாய்க்கு உட்பட்ட அறைகளில் 80 சதவீதமான காதலர் ஜோடிகள், இரண்டு நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்துகொண்டுள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஸ்கொடிஷோர்பிட் என்ற நிறுவனம், காதலர் தின பரிசுப் பொருட்களை விற்பனை செய்த விற்பனை நிலையங்கள், கருக்கலைப்பு நிலையங்கள் மற்றும் வைத்திய நிலையங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்திய ஆய்வின் மூலமே, குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

மேலும், காதலர் தினம் கொண்டாடப்படும் இம்மாதத்தில், குடும்பக் கட்டுபாடு தொடர்பான சாதனங்கள், மருந்தகங்களின் விற்பனை என்பன, இரு மடங்காக அதிகரித்துக் காணப்பட்டதெனவும் காதலர் தினத்தை அடுத்து வரும் மாதங்களில், ஏராளமான யுவதிகள் கருக்லைப்பு செய்துகொள்வதற்காக கருக்கலைப்பு நிலையங்களுக்குச் செல்வதாகவும், குறித்த ஆயிவில் தெரியவந்துள்ளது.

மேலும், காதலர் தினத்தில் காதலர்கள் பரிமாறிக்கொள்ளும் சிறந்த பரிசு , பாலியல் ரீதியிலான உறவு என்ற எண்ணக்கருவையே, தற்கால இளைஞர்கள் ஏற்படுத்திக்கொண்டுள்ளனர்.

காதலர் தினத்துக்கு அடுத்து வரும் நாட்களில், யுவதிகள் தற்​கொலை செய்துகொள்ளும் வீதம்  வழமையை விட இரட்டிப்பாகுவதாகவும் அந்த ஆய்வில் மேலும் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X