Kogilavani / 2016 மே 20 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் நாடாளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட கதீப் மற்றும் இமாம்மார்களுக்கான இலவச உம்றா திட்டத்தின் 100 பேர் கொண்ட மூன்றாவது குழு நேற்று (19) வியாழக்கிழமை மக்கா நகர் நோக்கி புறப்பட்டது.
இவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்றது.
இதில் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் அமீர் அலி, மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நிறைவேற்று அதிகாரி ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதுவரைக் காலமும் உம்றா அல்லது ஹஜ் கடமையை நிறைவேற்றாத 55 வயதுக்கு மேற்பட்ட இமாம்கள் மற்றும் கதீப்மார்களுக்கு இலவசமாக உம்றா செய்வதற்கான வாய்ப்பை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இதற்கமைய தலா 100 பேர் கொண்ட முதலிரண்டு குழுக்களும் அண்மையில் உம்றா கடமையை நிறைவேற்றி நாடு திரும்பியது.
இந்நிலையில் மேலும் 100 பேர் கொண்ட குழு இன்று மக்கா நகர் நோக்கி புறப்பட்டதுடன் விரைவில்; மீதமுள்ள 200 பேரும் வழியனுப்பி வைக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.



16 minute ago
20 minute ago
27 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
27 minute ago
7 hours ago