2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஓவியம் வரைந்த முதியவர் தவறி விழுந்து மரணம்

Editorial   / 2020 மார்ச் 05 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

என் ஜெயரட்னம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்,  மத்துகமை- யட்டதொல, பயாகல  வீதிக்கு குறுக்காக அமைந்துள்ள பாலத்தின் கீழ் உள்ள  சுவர்களில், சித்திரங்களை வரைந்துகொண்டிருந்த 75 வயதுடைய நபரொருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று  (04) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், யட்டதொல-நவுத்துடுவ பகுதியைச் சேர்ந்த டீ.எம். விஜேரத்ன என்பவரே, இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

சித்திரம் வரைதல் மற்றும் மரச் சிற்ப வேலைப்பாடுகளுக்கான  ஜனாதிபதி விருது பெற்ற இவர்,  இப்பகுதியை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களுடன் இணைந்து  தன்னார்வத்துடன் ஈடுபட்டு வந்துள்ளார்.

கட்டட வேலையில் உயரமான இடத்திலிருந்து வேலை செய்ய வசதியாகச் சுவரை ஒட்டி இரும்புக் குழாய்களை ஊன்றி, அவற்றின் மேல் பலகைகளைப் பரப்பி உருவாக்கப்பட்ட  தளத்திலிருந்து, (சாரம்) நேற்று  (04)  சுவரோவியங்களை வரைந்துக்கொண்டிருந்தபோது,  கால் தவறி அவர் கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து,  கட்டுகஹாஹேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக, களுத்துறை- நாகொட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X