2025 நவம்பர் 19, புதன்கிழமை

கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் கொலை

Kogilavani   / 2017 பெப்ரவரி 20 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

 

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலவத்தை பிரதேசத்தில், ஞாயிற்றுக்கிழமை (19) இரவு 10.15 மணியளவில், நபரொருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

எத்கால - கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த, போருதொட்டகே சிசிர குமார (வயது 37) என்பவரே, இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், காலவத்தை பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வீழ்ந்து கிடந்தபோது, பிரதேசவாசிகளால் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னரே அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக, வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே, இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது என, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், இதுவரையில் எவரும் கைதுசெய்யப்படவில்லை என, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X