Kogilavani / 2017 பெப்ரவரி 24 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
குளியாப்பிட்டியவில் இருந்து அளுத்கமை வரையிலான, இலங்கை போக்குவரத்துச் சபையின் புதிய சேவையொன்று, திவுலப்பிட்டிய இ.போ.ச டிப்போவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தினமும் காலை 5.30க்கு குளியாப்பிட்டிய நகரிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் இந்த பஸ், முற்பகல் 11.30க்கு அளுத்கமை நகரைச் சென்றடைந்து, மீண்டும் அளுத்கமையிலிருந்து பிற்பகல் 2.30க்கு புறப்பட்டு, குளியாப்பிட்டியவை இரவு 8.30க்கு வந்தடையும்.
குளியாப்பிட்டியவிலிருந்து பன்னல, படல்கம, திவுலப்பிட்டிய, மினுவாங்கொடை, கம்பஹா, கடுவெல, பத்தரமுல்ல, பிட்டகோட்டே, நுகேகொடை, களுபோவில, தெஹிவளை ஊடாக காலி வீதியை அடைந்து அளுத்கமையைச் சென்றடையும் இந்த பஸ், மீண்டும் இதே வழியாக குளியாப்பிட்டிய நோக்கிப் பயணிக்கும்.
இதன் ஒரு வழிக் கட்டணமாக 160 ரூபாய் அறவிடப்படுவதாக, திவுலப்பிட்டிய டிப்போ முகாமையாளர் எச். பீ. அநுர சாந்த குமார தெரிவித்தார்.
39 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
1 hours ago