Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
- பாநூ கார்த்திகேசு
கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய ஆட்சி நிலைமையின் காரணமாக சிறுபான்மை மக்களிடத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தொடர்பில் ஒரு கசப்பான மனநிலை நிலவுகின்றது. இந்த கசப்பான மனநிலையை நிவர்த்தி செய்யும் வகையில் எதிர்வரும் காலங்களில்; செயற்படுவோம் என புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சியில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மக்கள், தமது இன மற்றும் மத நம்பிக்கையைப் பேணும் வகையிலான செயற்பாடுகளே நடைபெறும். அத்துடன், இனங்களுக்கிடையில் சுமுகமான ஓர் உறவு கட்டியெழுப்பப்படும் வகையிலான செயற்பாடுகளும் முன்டினெடுக்கப்படும்' என்றும் அவர் கூறினார்.
மக்கள் மத்தியில் கட்சி தொடர்பில் நிலவுகின்ற தவறான எண்ணத்தை மாற்றி ஒரு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்துவோம். அத்துடன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, கூடுதலான மன்றங்களை கைப்பற்றுவதற்காக வியூகம் வகுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago