Princiya Dixci / 2016 ஜூன் 23 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்
தமது வேலைத்தளங்களில் தொழிற் சங்கங்களை அமைப்பதற்கு இடமளிக்குமாறும் உரிய சம்பளத்தை வழங்குமாறும், சம்பளத்தை அதிகரிக்குமாறும், ஊழியர்களிடம் பாலியல் லஞ்சம் கோருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்;, மேலும் பல்வேறு காரணங்களை முன்வைத்து கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் நேற்று புதன்கிழமை (22) மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுயாதீன தொழிற்சங்க ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இலங்கை வங்கி ஊழியர் சங்கம், பெண்கள் தொழிலாளர் ஒத்துழைப்புச் சங்கம், சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொதுச் சேவைச் சங்கம், ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம் உட்பட பல்வேறு தொழிற் சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்கின.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 800 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

54 minute ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
19 Nov 2025