Editorial / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஜெயரட்னம்
களுத்துறை மாவட்டத்தில், பெய்துவரும் கனமழையின் காரணமாக, பல பகுதிகள் நீரில் மூழ்கியதையடுத்து, போக்குவரத்து நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று (02) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், புலத்சிங்கள பகுதியில் 200 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், பாலிந்தநுவர 175, அகலவத்தை 150, ஹொரணை 125, களுத்துறை 60, வலலாவிட்டை பகுதியில் 40 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் கிடைக்கப்பெற்றதாக, களுத்துறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பொறுப்பதிகாரி கேர்ணல் சுஜித் குலசேகர தெரிவித்தார்.
களுத்துறை,காலி, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண் சரிவு அபாய (சிவப்பு எச்சரிக்கை) விடுக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்தும் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக இறப்பர், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்ல முடியாதுள்ளனர்.
16 minute ago
27 minute ago
30 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
27 minute ago
30 minute ago
37 minute ago