2025 மே 03, சனிக்கிழமை

கொஸ்கொட தாரக்கவுடன் தொடர்புடையவர் கைது

S. Shivany   / 2020 ஒக்டோபர் 14 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

என். ஜெயரட்னம்

பாதாள குழுத் தலைவர் கொஸ்கொட தாரக்க என்பவருடன், நெருங்கிய தொடர்புகளைப் பேணிவந்தவர் என நம்பப்படும் நபர் ஒருவரை,  உள்நாட்டு துப்பாக்கி ஒன்றுடன்  எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு ட்பட்ட பகுதியில் வைத்து,  அளுத்கம விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் , ஓபாத்த-கனத்தவத்தை பகுதியில் , வீட்டில் மறைத்து வைத்திருந்த நிலையில் மேற்படி துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த  நடவடிக்கை எடுத்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X