2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சிசுவின் உயிரிழப்பிற்கு வைத்தியர்களே காரணம்: தந்தை முறைப்பாடு

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மூலமாகப் பிறந்த தனது ஆண் சிசு, வைத்தியர்களின் தவறின் காரணமாக உயிரிழந்துள்ளதாக குறித்த சிசுவின் தந்தை, கட்டானைப் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

கட்டானை திசாகே வத்தைப் பிரதேசத்தில் வசிக்கும் ஜயந்த பிரியதர்ஸன என்பவரே இவ்வாறு முறையிட்டுள்ளார்.

சிசு பிறப்பதாகக் குறிக்கப்பட்ட தினத்துக்கு முன்னதாக சத்திரசிகிச்சை செய்யப்பட்டதன் காரணமாகவே சிசு உயிரிழந்துள்ளதாக, அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு பதில் நீதவான் கே.ஜி.குணதாச, இது தொடர்பாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்று, ஆரம்ப கட்ட விசாரணையை மேற்கொண்டார்.

சிசுவின் பிரேத பரிசோதனையை, நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையிலேயே மேற்கொண்டால் தனக்கு அசாதாரணம் ஏற்படும் என முறைப்பாட்டாளர் (தந்தை) தெரிவித்தார்.

இதன் காரணமாக, றாகமை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையை மேற்கொண்டு அறிக்கையை, மன்றில் சமர்ப்பிக்குமாறு, கட்டானைப் பொலிஸாருக்கு, நீர்கொழும்பு பதில் நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X