2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

சுவாமி பிரபுபாதா ஞாபகார்த்த முத்திரை வெளியீடு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிருஷ்ண பக்திக் கழகத்தின் ஸ்தாபகரும் குருவுமான பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் இலங்கை வருகையின் 50ஆவது வருடத்தைக் கொண்டாடும் வகையில் தபால் திணைக்களத்தின் தபால் முத்திரை, முதல் நாள் உறை மற்றும் ஸ்ரீல பிரபுபாதா தொடர்பான கையேடு என்பவற்றின் வெளியீட்டு வைபவம், வெள்ளவத்தை ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) மாலை 6 மணிக்கு நடைபெறும்.  

அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம், பிரதி அமைச்சர் துலிப் விஜயசேகர, அமைச்சின் செயலாளர் பி.எச்.எல்.விமலசிறி பெரேரா, தபால்மா அதிபர் பி.எல்.பி.ரோகண அபேவர்தன, முத்திரை வெளியீட்டு திணைக்களப் பணிப்பாளர் கே.கனகசுந்தரம் ஆகியோரின் பங்களிப்பில் நடைபெறும் இவ் வைபவத்தில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு சர்வதேச கிருஷ்ண பக்திக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X