Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 11 , பி.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்வித் துறையைப் பொறுத்த வரையில், கொழும்பு மாவட்டத்திலுள்ள தமிழ் பேசும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி வி.ஜனகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
கொழும்பில் அண்ணளவாக இரண்டரை இலட்சம் தமிழ் மக்களும் இரண்டரை இலட்சம் முஸ்லிம் மக்களுமாக மொத்தம் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர் என்றும், ஆனால் கொழும்பு மாவட்டத்தில் இருக்கக்கூடிய மொத்த பாடசாலைகளின் எண்ணிக்கை 32 ஆக உள்ளது என்றும் தெரிவித்த அவர், இந்தப் பாடசாலைகளை பொறுத்த வரை ஆரம்ப பாடசாலைகளுக்கு உள்ள பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக இருந்து வருவதாகவும் கூறினார்.
குறிப்பாக கொலன்னாவை, ராஜகிரிய, மொரட்டுவ, மஹரகம, நுகேகொட போன்ற பிரதேசங்களில் ஆரம்ப பாடசாலைகள் இல்லாத காரணத்தால், பல தமிழ் பேசும் மாணவர்கள் சிங்கள மொழி மூலத்தில் கல்வி கற்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது என்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு உள்ள பற்றாக்குறையே இதற்கான காரணமாகும் என்று அவர் கூறியுள்ளார்.
பொதுவாக 5 கிலோமீற்றர்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கே குறிப்பிட்ட பாடசாலையொன்றில் அனுமதி வழங்கப்படும் என்றும் ஆனால், அதற்கு அப்பால் வசிக்கும் தமிழ் பேசும் மாணவர்கள் தமக்கு அருகாமையில் உள்ள பாடசாலைகளுக்கே செல்லவேண்டிய நிர்பந்தத்துக்கு உட்படுகிறார்கள் என்றும் கூறினார்.
இந்த நிலைமையில், குடும்பத்தில் தாயும், தந்தையும் தமிழில் பேசுகிறார்கள் பிள்ளை சிங்களத்தில் பேச வேண்டிய நிலையில் உள்ளது என்றும் எனவே, முதலாவதாக கொழும்பு மாவட்டத்தில் தமிழ் பேசும் மாணவர்களுக்கு கட்டாயமாக ஆரம்ப பாடசாலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
36 minute ago
3 hours ago
3 hours ago