Princiya Dixci / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டு, சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிபுணர்களின் அறிவை தொழின்மையாளர்களிடம் கொண்டு செல்லும் நோக்குடன், இலங்கை கணணிச் சங்கத்தினால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாட்டின் (NITC 2015) அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேற்று திங்கட்கிழமை (7) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.
நேற்று ஆரம்பமாகிய இம்மாநாடு, எதிர்வரும் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளதோடு, தகவல் தொழில்நுட்ப தொழின்மையாளர்களின் அறிவை மேம்படுத்துவதற்கும் புதிய அறிவை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கவும் அவர்களுக்கு மத்தியிலான தொடர்புகளை வளர்ப்பதற்கும் சர்வதேச தொழின்மையாளர்களுடன் தொடர்புகளை வளர்த்துக்கொள்ளவும் இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை கணணிச் சங்கத்தின் 33 வருட பயணம் தொடர்பாக எழுதப்பட்ட ஒரு நூலும் இலங்கை கணணிச் சங்கத்தின் தலைவர் கலாநிதி தயான் ராஜபக்ஷவினால் இந்நிகழ்வில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
தொலைத்தொடர்பு, டிஜிடல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்ணாந்து, ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேன ஆகியோர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .