2025 நவம்பர் 19, புதன்கிழமை

தப்பியோடிய கைதி கைது

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 19 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

குளியாபிட்டியவில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசத்துக்கு மகுடம் கண்காட்சியின் ​போது, தப்பியோடிய கைதியொருவரைத் திருட்டுச் சம்பவம் தொடர்பில், ஜா-எல லினஸ்வெல்ல பிரதேசத்தில் வைத்து நீர்கொழும்பு பொலிஸார்  கைதுசெய்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு, வீடொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பிலேயே, 38 வயதுடைய குறித்த கைதி, கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து மடிக்கணினி, நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர், 18 மாத காலங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, மஹர சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், தேசத்துக்கு மகுடம் கண்காட்சியின் போது, திணைக்களத்தின் கண்காட்சிக் கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்த வேளை தப்பியோடி தலைமறைவாகியிருந்துள்ளதாக, நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X