Thipaan / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம், எதிர்வரும் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க மாலதி மண்டபத்தில் தலைவர் ஏ.என்.எஸ்.திருச்செல்வம் தலைமையில் நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டுச் செயற்பாடுகள் குறித்த அறிக்கை இதன்போது, செயலாளர் கே.ஜெயந்திரனால் வாசிக்கப்படும். புதிய நிர்வாகிகள் தெரிவும் இடம்பெறுவதுடன், அடுத்த ஆண்டுக்கான செயற்றிட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்படும்.
இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய உறுப்பினர்கள் அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறும், புதிய உறுப்பினர்களும் தமது விண்ணப்பப்படிவங்களைப் பூர்த்தி செய்து இணைந்துகொள்ள முடியும் எனவும் ஒன்றியத்தின் செயற்குழு தெரிவித்துள்ளது.
5 minute ago
7 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
7 minute ago
4 hours ago