Editorial / 2024 ஏப்ரல் 07 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பணி முடிந்து கணவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த களுபோவில போதனா வைத்தியசாலையின் தாதியர் சீமெந்து லொறியில் மோதி விபத்துக்குள்ளானதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிலியந்தலை ஜாலியகொட விஜய மாவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த தினுஷா கிரிஷாந்தி லியனகே என்ற 47 வயதான தாதியே மரணமடைந்தார். இவர் இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.
இந்த விபத்தில் அவரது கணவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
உயிரிழந்த தாதியின் கணவரும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் தொழிநுட்ப முகாமையாளராக கடமையாற்றுவதாகவும், பணியை முடித்துக் கொண்டு களுபோவில போதனா வைத்தியசாலைக்கு அருகில் சென்று மனைவியையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago