2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

திண்டாடும் மீன் வியாபாரிகள்

S. Shivany   / 2020 நவம்பர் 04 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக, தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள அளுத்கம பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில், நடமாடும் சேவைகள் ஊடாக மக்கள் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நடமாடும் வண்டிகளில் மீன் விற்பனையில் ஈடுபட்டுள்ள தங்களிடம் மீன் கொள்வனவு செய்ய நுகர்வோர் விரும்புவதில்லை என, மீன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு கிலோ கிராம் மீனை 250 ரூபாய் என்ற குறைந்த விலையில் வீட்டருகில் கொண்டுச் சென்று  விற்றாலும் அதனை வாங்க நுகர்வோர் மறுக்கின்றனர் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தங்களின் வியாபார நடவடிக்கை  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, மீன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X