2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

‘தெபா எல’ கால்வாயால் ஆபத்து

Editorial   / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடைமழையால், நீர்கொழும்பு - கட்டுவை பிரதேசத்தில் உள்ள தெபா எல கால்வாய் நிறைந்து, வெள்ள நீர் வீடுகளுக்குள் வருவதன் காரணமாக, பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக, பிரதேசவாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதேசவாசிகள் கருத்துத் தெரிவிக்கையில்,

“தெபா எல கால்வாய், கடந்த இரண்டு வருட காலமாகச் சுத்தம் செய்யப்படவில்லை. இந்தக் கால்வாயில், தாவரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன, குப்பைகள் தேங்கியுள்ளன. இதன் காரணமாக, நுளம்பு பெருகி, பிரதேசத்தில் வசிக்கும் பலரும், நோய்களால் பாதிக்கப்பட்டனர்.

“தற்போது, மழை காலம் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், தேபா எல கால்வாய், மரங்களாலும் குப்பைகளாலும் நிறைந்து காணப்படுவதன் காரணமாக, மழை நீர் வழிந்தோட முடியாதுள்ளது. அதனால் மழை நீர், தற்போது எமது வீடுகளுக்கு வந்துள்ளது.

“பிரதேசவாசிகள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில், இந்த அனுபவம் எமக்கு ஏற்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள பாலம், 25 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நீர் மட்டத்தில் இருந்து குறைந்த உயரத்தில் பாலம் அமைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, குப்பைகள், மரங்கள் சேர்ந்து, நீர் ஓட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

“எனவே, நீர்கொழும்பு மாநகர சபை, பிரதேச செயலக அதிகாரிகள் ஆகியோர், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X