2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

நெதர்லாந்து தம்பதிகள் கைது

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெதர்லாந்தின் இளம் தம்பதிகள், கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தில் வைத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுடன் சிலாபம், கோட்டை புகையிரத முதலாம் வகுப்பில் பயணம் செய்தமைக்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

முதலாம் வகுப்பு உறங்கும் சொகுசுப் பிரிவுக்கான தகவுகளை அடைத்துக்கொண்டு உள்ளே இருந்த இவர்களை, பலமுறை வெளியே வருமாறு பொலிஸார் கூறியபோதும், அவர்கள் அங்கிருந்து வெளியே வரவில்லை என்றும் வெகுநேரமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பின்னரே அவர்களைக் கைதுசெய்ய முடிந்தது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்தப் பிரச்சினை காரணமாக, குறித்த ரயில் சில மணிநேரம் தாமதமாகப் புறப்பட்டள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X