Princiya Dixci / 2017 பெப்ரவரி 09 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹலோகோப் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியமை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து, இருவருக்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்து, பணச் சலவையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டே, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, கொழும்பு நீதிமன்ற மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்திக பிரபாத் கருணாஜீவா மற்றும் இரேஷா சில்வா ஆகிய சந்தேகநபர்களுக்கு, சர்வதேசப் பொலிஸாரினூடாக திறந்த பிடியாணை பிறப்பித்து, நீதவான் உத்தரவிட்டார்.
சந்தேகநபர்களுக்கு எதிராக, மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பில், சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர், மன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
அத்துடன், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை தினத்தன்று, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சந்தேகநபர்கள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட நீதவான், வழக்கை ஜூன் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago