Editorial / 2020 மே 05 , பி.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
நீர்த்தாங்கியை திருடி சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்திய 27 வயதுடைய இளைஞனை, துவேகம- உக்கல்பொட பகுதியில் வைத்து, களுத்துறை தெற்கு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது கசிப்பு உற்பத்திக்காக தயார் நிலையில் இருந்த 1,530 மில்லி லீற்றர் கோடாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, கசிப்பு உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்ட பெருமளவு உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .