2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

பெண்களைச் சீண்டினால் தண்டனை இனி நிச்சயம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 09 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுப் போக்குவரத்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் மற்றும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு எதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பான நடவடிக்கைகளை, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுடன் இணைந்து, பொலிஸார் முன்னெடுக்கவுள்ளனர் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.

சமூகத்தில் பெண்களைப் பாதுகாக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே, இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, பொதுப் போக்குவரத்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல் மற்றும் பாலியல் ரீதியிலான தொல்லைகளை நிவர்த்தி செய்வதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள மகளிர் தினத்தை மையப்படுத்தியே, இந் டவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் பாலியல் ரீதியிலான தொல்லைகள் இடம்பெறுமாயின், அது தொடர்பில் பொலிஸாருக்குத் தெரியப்படுத்துமாறு, பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X