2025 நவம்பர் 19, புதன்கிழமை

பொதுக்கொள்முதல் மாநாடு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 20 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்குப் பெருமையைத் தேடித்தரும் தெற்காசியப் பிராந்திய நான்காவது கொள்முதல் மாநாடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு சினமன்கிரேன்ட் ஹோட்டலில், இன்று (20) ஆரம்பமானது.

இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை கொழும்பிலும் கண்டியிலும் நடைபெறவுள்ள இம்மாநாட்டில், பூகோளரீதியான கொள்வனவின்போது, எமது நாடு உயர்ந்த இடத்தை பெறுவதற்கு பிராந்திய நாடுகளின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

இலத்திரனியல் கொள்முதல் முறைமைக்கு எமது நாடு மாறவேண்டியதன் முக்கியத்துவத்தை அறிந்துள்ள அரசாங்கம், நான்காவது மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. உலக வங்கி, ஆசிய ஆபிவிருத்தி வங்கி, இஸ்லாமிய அபிவிருத்திவங்கி, நிதி அமைச்சு மற்றும் அரசாங்க நிதி திணைக்களம் ஆகியன இணைந்து இம்மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளன.

நாட்டின் நலனுக்காக புதிய பொருளாதார மற்றும் சமூக சூழலை ஏற்படுத்துவதற்காக மட்டுமன்றி, பேண்தகு அபிவிருத்தியை நோக்கி ஒரு தெளிவான பிரவேசத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்புகளுக்கு இந்த மாநாடு இலங்கையில் நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகிறது.

இலத்திரனியல் கொள்முதல் முறைமைக்கு நாட்டை மாற்றுவதன்மூலம் அரச நிதி முகாமைத்துவத்தைத் துரிதமாகவும்,  வினைத்திறன்மிக்கதாக்கவும் மேற்கொள்வதுடன் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்து ஊழல் மோசடிகளுக்கான வாய்ப்புகளைக் குறைக்கவும் முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X