Princiya Dixci / 2016 ஜூலை 09 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்ளும் வேலைத்திட்டம், இன்று சனிக்கிழமை (09) முற்பகல், நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரம் அருகில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான ரொயிஸ் பெர்ணாந்து தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையான கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் பெர்னாந்துவின் தலைமை உரையைடுத்து கட்சிக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்ளும் நிகழ்வு இடம்பெற்றது.
இதில்; கட்சி உறுப்புரிமையைப் பெறுவதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து பலர் கட்சியில் சேர்ந்து கொள்வதற்கு விண்ணப்பம் செய்தனர்.
5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026