2025 மே 05, திங்கட்கிழமை

பொன்விழா கொண்டாடும் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் பொன்விழா, எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளதுடன், கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் ஆகியோர், கௌரவ அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளதுடன் பொன்விழா முத்திரையொன்றும் வெளியிடப்படவுள்ளது. அத்துடன் புதிததாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடமும் திறந்து வைக்கப்படவுள்ளது.

அத்துடன், கல்விப்பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் டிஜிட்டல் முறையிலான அடையாள அட்டையும்   அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

பொன்விழாவை முன்னிட்டு, 15, 16, 17ஆம் திகதிகளில் மாபெரும் கல்விக் கண்காட்சி கல்லூரி வளவில் நடைபெறவுள்ளது.

முதல்நாள் கண்காட்சியில், சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதம அதிதியாக கலந்துகொள்வார். இரண்டாம் நாள் நிகழ்வில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவும், மூன்றாம் நாள் நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X