Princiya Dixci / 2016 மே 03 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-இக்பால் அலி
பொல்கஹவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்கொல்லப் பகுதியில் புறாப் பிரச்சினையின் காரணமாக தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமுற்ற 22 வயதான இளைஞன், குருநாகல் போதனா வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (03) உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் எம்.ஆர். எம். ரிப்கான் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
தம்பி வளர்த்த புறா காணாமற் போனதாகவும் அப் புறாவைப் பெற்றுத்தருவதாகக் கோரி, நேற்று திங்கட்கிழமை (02) மாலை 02 மணியளவில் தொலைபேசி அழைப்பொன்று வந்ததையடுத்து தம்பியும் உயிரிழந்த குறித்த இளைஞனும் மேலும் இரு இளைஞர்களுடன் தெல்கொல்ல என்ற இடத்துக்குச் சென்றுள்ளனர்.
அங்கு இரு தரப்பினருக்கிடையே இடம்பெற்ற வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாறிய போதே குறித்த இளைஞன் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இதைக் கண்ட அப்பிரதேசத்தவர்கள், பொல்கஹவெல மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வந்து அனுமதித்துள்ளனர். அதன் பின்னர், அங்கிருந்து அவசர சிகிச்சைக்காக குருநாகல் போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (03), இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்கஹவெலப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago