Princiya Dixci / 2017 மே 05 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) மற்றும் சுதந்திர ஊடக இயக்கம் இணைந்து, உலக பத்திரிகை சுகந்திர தினம் 2017 ஐ முன்னிட்டு ஊடக சுதந்திரம்இ சமூக மறுசீரமைப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக குழு விவாதமொன்றை, கடந்த புதன்கிழமை (03) நடத்தின.
'ஊடக சுதந்திரம்இ சமூக மறுசீரமைப்பு மற்றும் கட்டுப்பாடு' எனும் தொனிப்பொருளில், இந்தக் குழு விவாதம் நடைபெற்றது.
UNESCO பொது மாநாட்டின் பரிந்துரையினை தொடர்ந்து UN இன் பொது கூட்டத்தில் டிசம்பர் 1993ஆம் ஆண்டு உலக பத்திரிகை சுகந்திர தினத்துக்;காக வலியுறுத்தப்பட்டது.
இதன் மூலம் ஊடகவியலாளர்கள் பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை கோட்பாட்டினை கொண்டாடவும்இ உலகெங்கிலும் பத்திரிகை சுதந்திரத்தின் நிலையை மதிப்பீடு செய்யவும் ஊடகங்கள் தமது சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளவும்இ கடமையின் பொது தமது உயிரை நீத்த உடகவியலாளர்களுக்காக அஞ்சலி செலுத்தவும் இது வழி வகுக்கிறது.
இக்குழு விவாதமானது, இலங்கையில் தற்போதய ஊடக சுதந்திரத்தின் நிலை குறித்தும் இலங்கையின் ஊடக தரநிலைகளுக்கான அரசாங்க விதிமுறைகளை ஊகித்தல் குறித்தும் மையப்படுத்தப்பட்டு இருந்தது.
விவாதத்தில் பல்தரப்பட்ட கருத்துக்கள் பகிரப்பட்டதோடு, ஊடக வல்லுனர்களாலும் கல்விமான்களாலும் மற்றும் அரச பிரதிநிதிகளாலும் உருவாக்கப்பட்ட குழு மேலும் விவாதத்தை சுவார்ஸ்யம் ஆக்கியது.
செல்வி ஹனா இப்ராஹிம் - தினசரி வாராந்த எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஆசிரியர் திரு. ஜகத் லியணாராட்சி - இயக்குனர் தகவல் கட்டம்இ தேசிய ஊடக ஸ்தாபனம் திரு. எம்.ஜெ.ஆர். டேவிட் - மூத்த விரிவுரையாளர் பேராதனை பல்கலைகழகம் மற்றும் ஷெஹான் பரனகே - செய்தி இயக்குனர் தெரன தொலைக்காட்சி ஆகியோர் இக்குழுவினைப் பிரதிநித்துவபடுத்தினர்.
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
1 hours ago