Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 09 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பத்தரமுல்ல தியத்த உயனயிலிருந்து வௌ்ளவத்தை வரை , வாவியினூடான பயணிகள் படகுப் போக்குவரத்துச் சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதென, காணி சீர்த்திருத்த அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் அசேல இத்தவில தெரிவித்தார்.
வீதிகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் கருத்திற்கொண்டே, இந்தப் படகுச் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இதன் மூலம், உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நன்மையடைவர் என்றும், அவர் தெரிவித்தார்.
இப்படகுச் சேவையைப் பயன்படுத்துவதன் மூலம், காலநேரத்துக்குள் தங்களது பயணங்களை முடித்துக்கொள்ளும் வாய்ப்பு, பயணிக்களுக்கு கிடைக்கின்றது.
அதேவேளை, வாவியின் இருபுறங்களிலும் சிறுத்தைகள், முதலைகள் மற்றும் இந்நாட்டுக்கே உரித்தான பறவைகள் என, பல வகையான விலங்கினங்களையும், சுற்றுலாப் பயணிகள் காணக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தப் படகுச் செவையானது, இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்த அவர், மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சும் காணிச் சீர்த்திருத்த அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்தே, இந்தச் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
45 minute ago
2 hours ago
3 hours ago