Editorial / 2020 மார்ச் 08 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
என் ஜெயரட்ணம்
களுத்துறை வலய பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், வெலிப்பென்னை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொந்துப்பிட்டிய முதலிகம பகுதியில், ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டில், 55 வயதுடைய பெண்ணொருவர் இன்று (08) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து, 750 மில்லி கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின், பெண்ணின் இரண்டு மகன்களும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
பேருவளை, தர்ஹாநகர், வலகெதர, மீகம, வெலிப்பென்னை மற்றும் கொட்டபிட்டிய பகுதிகளுக்கு, குறித்த பெண் ஹெரோய்ன் விநியோகித்து வந்துள்ளதாக, பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கைதான குறித்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக நடவடிக்கைகளை வெலிப்பென்னை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
9 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
22 Dec 2025