Princiya Dixci / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, கறுவாத்தோட்டம், பிடலிவத்த பகுதியிலுள்ள வீதியை ஊடறுத்து மின் வயர் போடப்படுகின்றமையை எதிர்த்து, ரஷ்ய தூதரகத்துக்கு முன்னால், பிரதேசவாசிகள் நேற்று திங்கட்கிழமை (14) ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்தின் தேவைக்காகவே குறித்த மின்வயர் போடப்படுவதாகவும் இதனால் தாம் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் விசனம் தெரிவித்தனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தை அடக்க முற்பட்ட பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .