Princiya Dixci / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு பல்கலைக்கழக வளாகத்திலும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலும் நீண்ட நாட்களாக மடிக்கணினிகள், டெப் மற்றும் கையடக்கத்தொலைபேசிகளைத் திருடியவரை, நேற்று புதன்கிழமை (09) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கையடக்கத்தொலைபேசியொன்றை குறித்த நபர் திருடும் காட்சி சி.சி.டி.வி கமெராவில் பதிவாகியமையைத் தொடர்ந்து பொலிஸார் இவரைக் கைது செய்துள்ளனர்.
குறித்த நபரை, கிராண்ட்பாஸ் பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்தபோது கைது செய்ததாகவும் இவரிடமிருந்து 02 மடிக்கணினிகள் உட்பட 12 கையடக்கத்தொலைபேசிகளைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .