Editorial / 2020 மார்ச் 25 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் பரவல் (Covid - 19) காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையால் பாதிக்கப்பட்டுள்ள நாட்கூலி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான உணவுத் தேவையைப் பூர்த்திசெய்யும் பொருட்டு, ஜனனம் Foundation மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. கொழும்பு பிரதேசங்களான தெஹிவளை, வெள்ளவத்தை, மட்டக்குளி ஆகிய பகுதிகளில் வாழும் சுமார் 600 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை, தலைவர் மனோ கணேசனின் வரிகாட்டலுக்கிணங்க, ஜனகன் வழங்கிவைத்தார்.
அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் ஜனகன் விநாயகமூர்த்தி அவர்களின் முன்னெடுப்பில் முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினர் குருசாமி தலைமையில், தற்போதைய கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் பால சுரேஷ், திருமதி மஞ்சுளா, விஷ்ணுகாந்த் மற்றும் ஜனனம் Foundationஇன் அலுவலக உறுப்பினர்களின் உதவியுடன் உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நடவடிக்கை, வெற்றிகரமாக இன்று (24) முன்னெடுக்கப்பட்டது.
இந்த மனிதாபிமான நடவடிக்கையின்போது பொதிகளைப் பெற்றுக்கொண்ட மக்கள், அரசாங்கம் செய்ய வேண்டிய வேலைத்திடங்களை, நிலைமை அறிந்து முந்திக்கொண்டு செய்த சேவைக்காக தங்களுடைய மகிழ்சியை ஜனனம் அறக்கட்டளை நிறுவனத்துக்குத் தெரிவித்தார்கள்.
இந்த மனிதாபிமான நடவடிக்கையை, அடுத்து வரும் சில தினங்களுக்கும் தொடருமாறு, தலைவர் மனோ கணேசன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். தலைவரின் அறிவுறுத்தலுக்கிணங்க, இந்த மனிதாபிமான நடவடிக்கை தொடருமென ஜனனம் Foundation நிர்வாக அறங்காவலரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளருமான ஜனகன் விநாயகமூர்த்தி உறுதியளித்துள்ளார்.
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
1 hours ago